புதிய படங்களின் தியேட்டர் வாழ்க்கையை அதிகரிக்க தயாரிப்பாளர்கள் புதிய சிகிச்சையை கையாளப் போகிறார்கள். குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நடித்து வெளிவரவிருக்கிற ‘தக் லைஃப்,’ ‘கூலி’ ஆகிய படங்களின் ஓ டி டி ரிலீஸ்க்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது .
இந்த கட்டுப்பாடுகள் பிற நடிகர்கள் நடித்து வெளியாகிற படங்களுக்கும் பொருந்தும் .
தியேட்டரில் 8 வாரங்கள் ஓடிய பின்னர்தான் ஓ டி டி யில் ரிலீஸ் செய்யப்படவேண்டும் . இந்த கட்டுப்பாடு வட இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர் வருவாய் அதிகரிக்கும் என்கிறார்கள்.
இன்னொரு சிக்கலும் இருக்கிறது. தியேட்டர்களில் ஓடாத படங்களை ஓ டி டி நிறுவனங்கள் அடி மாட்டு ரேஞ்சுக்கு விலை பேசமுடியும். வாங்க முடியாது என மறுக்கவும் வழி இருக்கிறது. பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறது என்பதை.!












