வெட்ட வெளியில் ,காலைப் பனியில் போர்வைக்குள் முயங்குவது தனிச்சுகம். காலைப் பொழுதின் கலவியை சொர்க்கம் என்பார்கள்.அந்த சுகம் எல்லோர்க்கும் கிட்டியதில்லை.
ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசைக்கோர்வையை செவிகளில் தவழ விடுகிற போது கிடைப்பது பேரின்பம். அந்த பேரின்ப விழா வருகிற செப்டம்பர் பதிமூன்றாம் தேதி சென்னையில் நிகழ்கிறது.
இளையராஜாவுக்கு பாராட்டு விழா. பெயர் இசை விழா .!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.
இடம் நேரு ஸ்டேடியம் .ஆந்திரம்,கேரளம்,கன்னடம், இந்தி ஆகிய மாநிலங்களில் இருந்து பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஞானியின் சிம்பனி இசை சிறப்பு நிகழ்வு.
தமிழக அரசு முன்னின்று நடத்துகிற இந்த விழாவில் தல அஜித் ,த,வெ.க.தலைவர் விஜய் கலந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை. ஆனால் எல்லா மாநில கலைஞர்களையும் அழைக்கவேண்டும் என்று அரசு செயல்படுகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இசை விழாவை உலகமே உற்று நோக்க வேண்டும் என்கிற முனைப்புடன் நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறார்.












