இருபத்தி நான்கில் தொடங்கிய லவ் இருபத்தி ஐந்து டிசம்பர் ஒன்னில் மேரேஜ் ஆக முடிந்திருக்கிறது.
ராஜ் நிடிமோர் என்பவர் பாலிவுட் டைரக்டர். இவருடன் லிவ் இன் ரிலேசனில் இருந்தார் நடிகை சமந்தா ருத் .
இருவருமே அவரவர் வாழ்வில் மண விலக்கு வாங்கியவர்கள்தான்.
அக்கினேனி குடும்பத்தில் வாக்கப்பட்டு வெளியில் வந்தவர் சமந்தா .
சியாமளா டே என்பவரை மணந்து விவாக ரத்து வாங்கி வந்தவர் நிடிமோர் .
ஆக சமந்தாவுக்கும் நிடிமோருக்கும் திருமண பந்தம் என்பது புதியது அல்ல.
இவர்கள் இன்று கோவை இஷா யோகா மையத்திலுள்ள லிங்க பைரவி கோவிலில் திருமணம் செய்துகொண்டுவிட்டார்கள். சுற்றம் என்பது முப்பது பேர் இருக்கலாம். அளவான அழைப்பு .
இவர்களது திருமணம் முன்னதாகவே நிடிமோரின் மனைவி சியாமளா டே வுக்கு தெரிந்திருக்கும் போலிருக்கிறது. அவரது இன்ஸ்ட்ராவில் இப்படியாக பதிவிட்டிருக்கிறார்.
“நம்பிக்கை இல்லாத மனிதர்கள் ,நம்பிக்கையற்ற காரியங்களையே செய்வார்கள்” அதாவது விரக்தி அடைந்தவர்களின் சேர்க்கை என்பதாக சியாமளா நினைக்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.












