நடிகர்விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று பேசு பொருளாக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. லாட்டரி கிங் மார்ட்டினின் மருமகன் .பல கட்சிகளில் உண்டு,உறங்கி தற்போது விஜய்யிடம் தங்கி இருப்பவர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .நடித்திருக்கும் மந்திரி குமாரியின் வில்லன் கேரக்டர் இவரிடம் யாசகம் கேட்கும் என்று சொல்கிறார்கள் .அந்த அளவுக்கு சிந்தனையோட்டம் உள்ளவர் என்கிறார்கள். அந்த படத்தில் வில்லனாக வந்தவர் மறைந்த எம்.என்.நம்பியார்.ராஜ குரு.
அரசியலுக்கு புதியவர் தளபதி விஜய். இவரது தளகர்த்தர்களில் ஆதவ் ஒருவர்.
கட்சியில் ஒருவரது பலம் ,மற்றவரின் பலவீனம்தான்.! வெகு சுலபத்தில் கவிழ்த்து விடலாம். அதில் ஆதவ் அர்ஜுனா முது நிலை பட்டதாரியாம்.
தமிழ்நாடு தற்போது எதிர்கொள்ளவிருக்கிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் கழகமும் ஒன்று. பெரும்பான்மையான தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கி வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளப் போகிறது.
தன்னை சார்ந்த முப்பது வேட்பாளர்களை பல தொகுதிகளில் களம் இறக்கப் போகிறாராம் ஆதவ் அர்ஜுனா. அதற்காக பெருந்தொகையை இறக்கப்போவதாக சொல்கிறார்கள். கட்சியின் தனக்கு சாதகமாக ஒரு அணியை உருவாக்குவது எதிர்கால அரசியலுக்கு உதவும் என நினைக்கிறார் என்கிறார்கள்.
இன்னும் காலம் இருக்கிறது .அது கணக்குப் போடும்.
—வேங்கைப் புலி.












