
தீபாவளிக்கு முதல் நாள் உலக நாயகன் கமல்ஹாசனின் (நவ ஏழாம் தேதி )பிறந்த நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
அன்று இயக்குநர் அருண்குமாரின் புதிய பட அறிவிப்பு வெளியாகிறது .கலை ஞானி கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க ராஜ்கமல் தயாரிக்கிற படம் ஆகும்.இதற்கான வேலைகள் முழு வேகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன. எத்தகைய தோற்றம் என்பதை நேற்று முடிவு எடுத்து புகைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள். அந்த படம் ஏழாம் தேதி வெளியாகிறது.
இன்னும் ஷூட்டிங் ஸ்பாட் முடிவாகவில்லை. ஆனால் மதுரையை சுற்றி இடங்கள் தேர்வாகி இருக்கின்றன. முன்னர் சென்னையில் படப்பிடிப்பு நடத்திவிட்டு தென்காசி போகலாம் என்று முடிவு செய்திருந்தனர். அதில் மாற்றம் இருக்கிறதா எனது தெரியவில்லை.பதினைந்தாம் தேதிக்கு பிறகு படப்பிடிப்பு இருக்கலாம் என பேசிக்கொள்கிறார்கள்.












