சிவகார்த்திகேயன் மெயின் ரோல் ,தென்மாவட்டத்தின் மண் சார்ந்த கதை. வெற்றிப்படமான தாய்க்கிழவி படத்தை எழுதி இயக்கியவர் சிவகுமார் முருகேசன். அவர்தான் சிவகார்த்திகேயனின் படத்தையும் எழுதி இயக்குகிறார். ராஜ்கமல் இன்டர்நேசனல் ,டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப்படம் வருகிற அக்டோபரில் ரிலீஸ் ஆகும் ,படத்தின் பெயர் சேயோன் என்கிற விசயமெல்லாம் நாம் அறிந்தது தான்.
ஆனாலும் நமக்கு தெரியாதது ஒன்று இருக்கிறது.
அதுதான் உலகநாயகன் கமல் அந்த படத்தில் நடிக்கப்போகிறார் என்பது.
இது அதிகாரப்பூர்வமான செய்தியா ?
இன்னும் அறிவிக்கவில்லை.. விரைவில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிற சேதி! படப்பிடிப்பு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல்வாரத்தில் தொடங்கும் என்கிறார்கள்.
விருமாண்டி, முருகன் ஆகிய தெய்வங்களைப் பற்றிய கதை. இந்த கதையில் விருமாண்டியாக நடிக்கபோவது உலகநாயகன் கமல்ஹாசன் தானாம். ஏற்கனவே பின்னி பெடல் எடுத்த கேரக்டர்தான்.இவர் நடிப்பதால் படத்தின் வியாபாரம் பல மடங்கு பெருகும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
இந்தியன் 3 வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு சேயோன் ஆறுதலாக இருக்குமல்லவா!












