தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் யின் மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த மனுவில், கடந்த ஐந்து வருடங்களாக நானும் எனது கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். மகிழ்ச்சியாக எங்கள் குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. என் கணவர் நடிகை ஒருவருடன் உறவில் இருந்தார். அந்த உறவை முறித்துக் கொள்ளும்படி பலமுறை எடுத்து சொல்லியும், அவர் கேட்காததால் கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.என்றும் கூறியிருந்த நிலையில், அந்த நடிகை திரிஷா தான் என இணையத்தில் செய்திகள் தீயாக பரவியது .
மேலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு ஒரே காரில், ஒரே நிற உடையில் கலந்து கொண்டது பலரையம் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில்,அவரது கட்சிக்குள்ளும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகை திரிஷா குறித்து பலவிதமான வதந்திகளும், சர்ச்சைகளும் இணையத்தில் கோடி கட்டி பறந்து வரும் நிலையில்,நடிகை திரிஷா,எதை பற்றியும் கவலைப்படாமல் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஏதாவது ஒரு கருத்தை பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் “காதல் மட்டும் எல்லாம் அல்ல… ஆனால், காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடுப்பாகி , என்ன தாங்க சொல்ல வர்றீங்க? என்றும், தேர்தல் வரைக்கும் கொஞ்சம் சும்மா இருங்க மேடம் என்றும் அவரது கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.












