உச்ச இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறியுள்ள அனிருத், பிரபல தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாகவும்,
விரைவில் இருவரும் பெற்றோர் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தொடர்ந்து இணையத்தில் வதந்திகள் பரவி வரும் நிலையில்,அது வதந்தி இல்லய்யா உண்மை தான் என நடிகர் ரஜினிகாந்தின் உறவினரான ஒய் ஜி மகேந்திரன் சொல்லியிருக்கிறார்.
இது குறித்து ஒய் ஜி மகேந்திரன் யூ டியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளதாவது,”அனிருத் மிகவும் சாதுவான பையன். அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அவருக்கு வாழ்த்துகள் சொல்ல வேண்டும். நான் கேள்விப்பட்ட தகவலின் அடிப்படையில் தான் இதனை உறுதியாக சொல்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்












