Saturday, June 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

இயக்குனர், நடிகர் கே. பாக்யராஜ் மரணம்! முதல்வர் விஜய், முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி !!

admin by admin
June 27, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் (வயது 73 ) இன்று காலை7 மணியளவில் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் முக ஸ் டாலின் உள்ளிட்ட அரசியல் கடசி தலைவர்களும் , திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 1953 ஜனவரி மாதம் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் என்னும் ஊரில் பிறந்தவர். கிருஷ்ணசாமி-அமராவதி. தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். செல்வராஜ், தன்ராஜ் என இரு அண்ணன்கள் உண்டு. தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர், இயக்குநர், சிறப்பு வேடமேற்ற நடிகர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர் கே. பாக்யராஜ்.மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர். இதற்கு காரணம், அவரது தனித்துவமான கதை சொல்லும் முறையும், சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையும்தான். அவரது கதைகள் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும்.மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ, பிரம்மாண்டமோ இல்லாமல், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு நடக்கும் கதையைப் பார்ப்பது போன்ற உணர்வை அவர் தருவார். ஒரு கதையை எப்படி ஆரம்பித்து, எங்கே ட்விஸ்ட் வைக்க வேண்டும் அதை எப்படிச் சாமர்த்தியமாக அவிழ்க்க வேண்டும் என்பதில் அவர் கில்லாடி. “இன்று போய் நாளை வா”, “மௌன கீதங்கள்”, “பாமா ருக்மிணி” போன்ற பலபடங்களில் இவருடன் நடித்த பிரவீணா, மஞ்சள் காமாலை நோய் காரணமாக 1983ஆம் ஆண்டில் மறைந்தார். பின்னர் டார்லிங் டார்லிங் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவருமான பூர்ணிமா ஜெயராமை காதலித்து மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர். தனது மகள் சரண்யாவை பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் தன் இயக்கத்திலேயே கதாநாயகியாக இவர் அறிமுகம் செய்தார். சரண்யா பாரிஜாதம் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை.சாந்தனு “சக்கரக்கட்டி” படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.இந்நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் நடிகை ,கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு நேற்று சென்னை திரும்பிய நிலையில்,இன்று காலை வழக்கம் போல நடைப்பயிற்சி சென்று வீடு திரும்பியவர் 7 மணியளவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை குடும்பத்தினர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர் . அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் .அங்கு அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தனது குருநாதர் இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைந்த 17 நாட்களில் அவரது சீடர் பாக்ய ராஜும் மறைந்தது திரையுலகினரை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது. கே. பாக்ய ராஜின் உடல் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 9 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு,பெசன்ட் நகர் மின் மயானத்தில்11 மணியளவில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது

You might also like

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

admin

admin

Related Posts

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !
News

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

by admin
June 26, 2026
சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு  முதல்வர்  பாராட்டு !
News

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

by admin
June 26, 2026
ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !
News

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

by admin
June 26, 2026
“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!
News

“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

by admin
June 26, 2026
‘ இந்தியா ஸ்டோரி’ – டீசர் வெளியானது!
News

‘ இந்தியா ஸ்டோரி’ – டீசர் வெளியானது!

by admin
June 26, 2026

Recent News

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

June 26, 2026
சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு  முதல்வர்  பாராட்டு !

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

June 26, 2026
ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

June 26, 2026
“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

June 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?