கார்த்தி இரட்டை வேட நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் அடுத்த பாகம், ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகி நாளை வெளியாகவுள்ளது. .இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார்.
இப்படம் குறித்து கார்த்தி கூறும்போது, “சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக, இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் முந்தைய நிகழ்வுகளும், பிந்தைய நிகழ்வுகளும் உள்ளடங்கிய படமாக ‘சர்தார்-2’ இருக்கும். சில ஆங்கிலப் படங்களைப்பார்க்கும் போது நமக்கு ஏக்கமாக இருக்கும், எப்போது நம் ஊரில் இதுபோன்ற விஷுவலோடு, ஆக் ஷனோடு படம் பண்ணப் போகிறோம் என்ற ஆசை வரும்.சரி,‘ஹாலிவுட்’ படங்களை பார்த்து நாம் ஏக்கப்பட்டது போதும், தமிழில் அதுபோல ஒரு முயற்சியை செய்வோமே… என்ற வகையில், ‘சர்தார்-2’ படத்தை கொடுத்துள்ளோம்.
முதல் பாகத்தில் தண்ணீர் மற்றும் தண்ணீர் பாட்டில் குறித்த விஷயம் விழிப்புணர்வு விஷயமாக சொல்லப்பட்டது அது மாதிரியான ஒரு நல்ல சமூக கருத்து, 2ம் பாகத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ரசிகர்களுக்கு ஒரு நல்ல ஆக்ஷன் விருந்தாக இருக்கும்.சமீபத்தில் கூட பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் கொண்டு வருவதை பார்த்து எஸ்.ஜே.சூர்யா கோபத்தில் கத்தும் வீடியோ பெரிய அளவில் வைரலானது அதுபோல பிளாஸ்டிக் பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வை இப்படம் ஏற்படுத்தும்’, இவ்வாறு அவர் பேசினார்












