சென்னை காவல் ஆணையாளரிடம் தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் நாசர் புகார் மனு அளித்துள்ளார். சமூக ஊடகமான முகநூலில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சமூகப்பணிகள் குறித்து ஆதாரமற்ற, அவதூறான, தனிப்பட்ட கண்ணியத்தைப் பாதிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகள் மற்றும் இழிவான கருத்துகளைப் பொதுவெளியில் பரப்பிய சம்பவம் தொடர்புடைய பதிவுகளை முழுமையாக விசாரித்து, குற்றம் இழைக்கப்பட்டு இருப்பது நிரூபணமாகும் பட்சத்தில் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் வீண் அவதூறு பரப்பிய வீடியோவில் உள்ள பெண்மணி மற்றும் உடந்தையாக இருந்த அனைவர் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக புகார் மனு அளிக்கப்ப்ட்டுள்ளது.












