Wednesday, November 4, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகர் வெற்றியின் ‘பிளாக் கோல்டு’: நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

admin by admin
November 4, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

எம்.எம். ஸ்டூடியோஸ் (M.M. Studios) நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எம். மூர்த்தி பெரும் பொருட்செலவில் தயாரிப்பில், வளர்ந்து வரும் இளம் இயக்குனர் தீரன் அருண்குமார் இயக்கத்தில், எதார்த்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனித்துவமிக்க நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாக் கோல்டு’ (Black Gold) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி புதிய போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, விறுவிறுப்பான திரைக்கதையுடன் செதுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், வரும் நவம்பர் 13-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

பொதுவாக ‘பிளாக் கோல்டு’ (கருப்புத் தங்கம்) என்ற வார்த்தையைக் கேட்டவுடன் கச்சா எண்ணெய் அல்லது மிளகு ஆகியவற்றைத்தான் பலரும் நினைப்பார்கள். ஆனால், இத்திரைப்படத்தில் ‘பிளாக் கோல்டு’ என்று குறிப்பிடப்படுவது மனிதர்களின் தலைமுடியைத்தான் (Human Hair). உலகளவில் மனிதர்களின் தலைமுடிக்குக் பின்னால் ஒவ்வொரு நாளும் யாருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக நடைபெறும் மிகப்பெரிய நிழல் உலக வணிகமும், அதன் பின்னணியில் சர்வதேச அளவில் இயங்கி வரும் ஒரு பிரம்மாண்ட வலையமைப்பும்தான் இத்திரைப்படத்தின் முதன்மையான கதைக்களம். இந்த விசித்திரமான கிரைம் பின்னணியுடன், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் எதார்த்தமான சூழலையும், அப்பா – மகன் இடையிலான ஆழமான உணர்வுபூர்வமான உறவையும் இணைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

You might also like

அர்ஜுன் தாஸ் – மதுமிதா கூட்டணியின் ‘ஜான் டோ’ நவம்பர் 14 ரிலீஸ்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்த புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

பாரம்பரிய தீபாவளிப் பலகாரம். சமந்தாவின் சிறப்பு நேர்காணல்!

இத்திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினர் கலந்துகொண்ட பிரம்மாண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நாயகன் வெற்றி,

இத்திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று குறிப்பிட்டார். தமிழ் சினிமாவிற்கு இது முற்றிலும் புதியதொரு களமாக இருக்கும் என்று தெரிவித்த அவர், விறுவிறுப்பான கிரைம் த்ரில்லராக மட்டுமல்லாமல் மனித உணர்வுகளுக்கும் சரிவிகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் பணியாற்றிய சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர் எம். மூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் தீரன் அருண்குமார்,

அண்டை மாநிலமான கேரளாவில் வெளியாகும் மலையாளத் திரைப்படங்களைப் போல, முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்களுக்கான வரவேற்பு தமிழ் சினிமாவிலும் இன்னும் பெரிய அளவில் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இக்கதை உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் வெற்றியைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை விவரித்த இயக்குநர், குறைந்த பட்ஜெட்டிலும் குறைந்த நாட்களிலும் கதைக்கு ஏற்ற கதையின் நாயகனாக அவர் இருப்பார் என்று நம்பியதாகக் கூறினார்.

மேலும், படத்தில் நடிகர் அருள் டி. சங்கர் நடித்த ஒரு பிரத்யேகமான ‘சுருள் ஆயுதச் சண்டை’க் காட்சிக்காகச் சுமார் எட்டு முதல் ஒன்பது நாட்கள் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், திரையில் வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய அந்த ஒரு ஆக்ஷன் காட்சிக்காக ஒட்டுமொத்தக் குழுவும் அர்ப்பணிப்புடன் உழைத்ததாகக் கூறி, அதற்குக் காரணமான ஸ்டண்ட் மாஸ்டர் “மெட்ரோ” மகேஷுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரபல நடிகை அபிராமி,

இத்திரைப்படத்தில் தனக்குக் கிடைத்துள்ள வலுவான காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் குறித்துப் பேசினார். ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எந்தவொரு கலைஞருக்கும் மிகவும் சவாலான விஷயம் என்றும், இயக்குநர் தீரன் அருண்குமார் ஒரு திறமையான அறிவியல் ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது போல, அவ்வளவு நேர்த்தியாகவும் தெளிவாகவும் கதையைத் தனக்கு எடுத்துச் சொன்னதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைநழுவிப் போன கசப்பான அனுபவங்கள் தனக்கு இருந்ததால், ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் உறுதியானதுதானா என்று பலமுறை இயக்குநரிடம் சந்தேகத்தோடு கேட்டதாகவும், ஆனால் தன் மீது முழு நம்பிக்கை வைத்துத் தயாரிப்பாளரும் இயக்குநரும் இவ்வாய்ப்பை வழங்கியதாகக் கூறி இருவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இப்படத்தில் வெற்றிக் ஜோடியாக ப்ரியாலயா நடித்துள்ளார். மேலும், மூத்த நடிகர் லிவிங்ஸ்டன், துளசி, ‘பிக்பாஸ்’ புகழ் அபிராமி, முன்னணி இயக்குனர் ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சினிமாவில் சிறிய படம், பெரிய படம் என்ற பிரிவினைகளில் தனக்கு எப்போதுமே உடன்பாடு இல்லை என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்ட இயக்குநர் தீரன், ஒரு திரைப்படத்தின் உண்மையான மதிப்பைத் தீர்மானிப்பது அதன் வலுவான உள்ளடக்கம்தான் என்றார். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், உண்மைத் தரவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் வரும் நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், சினிமா ரசிகர்கள் அனைவரும் தியேட்டர்களுக்குச் சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும் எனப் படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

admin

admin

Related Posts

அர்ஜுன் தாஸ் – மதுமிதா கூட்டணியின் ‘ஜான் டோ’ நவம்பர் 14 ரிலீஸ்!
News

அர்ஜுன் தாஸ் – மதுமிதா கூட்டணியின் ‘ஜான் டோ’ நவம்பர் 14 ரிலீஸ்!

by admin
November 4, 2026
சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்த புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
News

சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்த புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

by admin
November 4, 2026
பாரம்பரிய தீபாவளிப் பலகாரம். சமந்தாவின் சிறப்பு நேர்காணல்!
News

பாரம்பரிய தீபாவளிப் பலகாரம். சமந்தாவின் சிறப்பு நேர்காணல்!

by admin
November 3, 2026
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’  5 புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!
News

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ 5 புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

by admin
November 3, 2026
ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியான  ‘கிங் ‘ படத்தின் முதல் பாடல்!
News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியான ‘கிங் ‘ படத்தின் முதல் பாடல்!

by admin
November 3, 2026

Recent News

அர்ஜுன் தாஸ் – மதுமிதா கூட்டணியின் ‘ஜான் டோ’ நவம்பர் 14 ரிலீஸ்!

அர்ஜுன் தாஸ் – மதுமிதா கூட்டணியின் ‘ஜான் டோ’ நவம்பர் 14 ரிலீஸ்!

November 4, 2026
சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்த புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்த புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

November 4, 2026
பாரம்பரிய தீபாவளிப் பலகாரம். சமந்தாவின் சிறப்பு நேர்காணல்!

பாரம்பரிய தீபாவளிப் பலகாரம். சமந்தாவின் சிறப்பு நேர்காணல்!

November 3, 2026
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’  5 புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ 5 புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 3, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?