வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் இசையமைப்பாளர் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக நடிக்க, ‘காதல் கசக்குதய்யா’ பட நாயகி வெண்பா நடிக்கும் படம் ‘பள்ளி பருவத்திலே’. இதில் தம்பி ராமையா, R.K.சுரேஷ் , பொன்வண்ணன், K.S.ரவிக்குமார், கஞ்சா கருப்பு, ஊர்வசி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இந்த படத்தின் டிரைலர், பாடல் காட்சிகளை பார்த்த பத்மஸ்ரீ கமல்ஹாசன் படத்தின் டிரைலர், பாடல் காட்சிகள் சிறப்பாக உள்ளது. இந்த படம் ஒவ்வொருவருடைய பள்ளி பருவத்திலே உள்ள ஞாபகங்களை நினைவுபடுத்தும். நந்தனராம், வெண்பா மாணவர்களாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். எனக்கும் என் பள்ளி பருவத்திலே காலங்களை ஞாபகப்படுத்துகிறது. பள்ளி பருவத்திலே படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன் என்றார் கமல்ஹாசன்.