திருமாருதி பிக்சர்ஸ் சார்பில் மாருதி Tபாலகிருஷ்ணன் தயாரிக்கும் படம்’விரைவில் இசை’.
அறிமுக இயக்குநர் வி.எஸ்.பிரபா இயக்குகிறார். இதில் மாஸ்டர் மகேந்திரன் , ‘உடும்பன்’ நாயகன் திலீப் ஆகியோர் கதாநாயகன்களாக நடிக்க,
ஸ்ருதி ராமகிருஷ்ணா,அர்ப்பணா. ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இவர்களுடன்,மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் இதில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிறார்.இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று கமலாதிரையரங்கில் நடைபெற்றது.இவ் விழாவில் .எஸ்.பி.முத்துராமன் பேசும்போது “இங்கே அபிராமி ராமநாதன் தன்னை நடிக்க நான் கூப்பிடவில்லையே என்று வருத்தப்பட்டார். அவரை நடிக்கக் கூப்பிட்டிருந்தால் ஒரு நல்ல அபிராமி மால் கிடைத்திருக்காது. ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்திருக்க மாட்டார். இன்று படம் எடுப்பது சுலபம். வெளியிடுவது சிரமம். இந்த நிலையில் இங்கே புதிதாக படம் தயாரிக்க வந்துள்ள தயாரிப்பாளர் திருமாருதி பிக்சர்ஸ் டி.பாலகிருஷ்ணனை வரவேற்கிறேன்.ரஜினி திரையுலகில் நுழையும் போது அவருக்கு ஒரு சவால் இருந்தது.
அப்போது நடிப்பில் கொடி கட்டிப்பறக்கும் சிவாஜி இருந்தார். நினைத்த தோற்றத்தில் மாற்றிக் கொண்டு நடிக்கும் கமல் இருந்தார்.
‘இவர்களுக்கு இடையில் நான் புகுந்து எப்படி வெற்றி பெறுவது என்று யோசித்தேன். அதனால்தான் எனக்கென்று ஒரு ஸ்டைல், ஸ்பீடு, வேகம் என்பதை என் பாணியாக சேர்த்துக் கொண்டு நடித்தேன். வெற்றி பெற்றேன்.’ என்று இதைப் பற்றி ரஜினியே என்னிடம் கூறியுள்ளார்.
நான் ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கிஇருக்கிறேன்.நான் ரஜினியை வைத்து 25படங்கள் இயக்கியிருக்கிறேன்., கமலை வைத்து10 படங்கள் இயக்கியிருக்கிறேன்.நடிகர்திகத்தை வைத்து 3.படங்கள் இயக்கியிருக்கிறேன்..இது எல்லாம் எப்படி? எங்களுக்குள் அந்தளவுக்கு புரிதல் இருந்தது.
எங்களுக்குள் சண்டையே வந்ததில்லையா? ரஜினியுடன் கமலுடன் நான் போடாத சண்டைகளா? சண்டையைப் பார்த்தவர்கள் இவர் இனி. ரஜினி படம் எடுக்கமாட்டார்.இவர் இனி. கமல் படம் எடுக்கமாட்டார். இதுவே இவர்களது கடைசி படம் என்றுதான் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எனக்குத்தான் அதிகப் படங்கள் கொடுத்தார்கள். எங்களுக்குள் தனிமனித ஈகோ இல்லை. நீயா நானா போட்டி இல்லை..
படம் ,காட்சி எப்படி சிறப்பாக வரவேண்டும். என்பதற்கான கருத்து மோதல்தான் அது.
எது சரியென்று நான் அவர்களை சமரசம் செய்யவேண்டும். இல்லையேல் அவர்கள் சொல்வதில் சமரசம் ஆகவேண்டும். எல்லாமே படத்துக்காக மட்டும்தான். 20 ஆண்டுகளில் 70 படங்கள். என் சாதனையா? அல்ல.அது என் படக்குழுவினரின் சாதனை ,அது என் படக்குழுவினரின் வெற்றி.
அதேபோல இந்தக் குழுவும் ஒற்றுமையுடன் இருந்து வெற்றி பெறவேண்டும் “என்று வாழ்த்தினார்.