பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து வடிவேலு, தனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒதுக்கி தள்ளினார்.கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் அடம் பிடித்து வந்தார். சம்பளத்தையும் ஏற்றினார்.
மேலும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார் ஆனால், அவை யாவும் எடுபாடாமல் போனது அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாய் ஆகிப்போனது வடிவேலுவின் நிலைமை! அவரின் மார்கெட் சரிந்தது . பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. இந்நிலையில் தனக்கு பெயர் வாங்கி கொடுத்த இயக்குனர் சிம்பு தேவனை சந்தித்து தன்னை மீண்டும் கை தூக்கி விடக்கோரி கண்ணீர் விட்டாராம் வடிவேலு. இதையடுத்து மனம் உருகிய இயக்குனர் சிம்பு தேவன், கடந்த ஆண்டு இயக்குனர் ஷங்கரை சந்தித்து இம்சை அரசனின் இரண்டாம் பாகத்தின் கதையை சொல்ல, அவரும் ஒ.கே தான். ஆனா, வடிவேலு தான் வேணுமா, அவருக்கு மார்கெட் சுத்தமா அவுட். பார்த்து செய்யுங்க , சம்பளமும் அதிகமா கேட்கிறாரே என அரை குறை மனதுடன் கூறிவிட , ஒரு வழியாய் ஓ.கே ஆனது. இதையடுத்து சங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாக ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கியது. இந் நிலையில் தான் வடிவேலு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இயக்கம், ஆடை வடிவமைப்பு, இசை, துணை நடிகர்கள் என அனைத்துத் துறையிலும் மெல்ல மெல்ல தலையிட்டவரால் ஒரு கட்டத்தில் இயக்குனர் தலையிலேயே கை வைக்க,படபிடிப்பு ரத்தானது. கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட அரங்கங்கள் வீணாகின. பொறுத்து பார்த்த இயக்குநர் ஷங்கர்,ஒரு கட்டத்தில்,தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்து விட்டார். தான் இது வரை செலவு செய்த சில கோடிகளை வடிவேலுவிடமிருந்து பெற்று தர வேண்டும் என முறையிட்டுருந்தார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நடிகர் சங்கத்துக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் தற்போது சங்கரின் பக்க நியாயத்தை உணர்ந்து , வடிவேலுவிடம்ஓ ன்று நடித்து கொடுங்க ,இல்லைனா, அவங்க ளுக்கு இது வரை ஆனா செலவை திருப்பி கொடுங்க என கண்டிப்புடன் கூறி விட்டதாம். இந்நிலையில் வடிவேலு நடிக்க இருந்த ஆர்.கே.மற்றும் ஜீவா படங்களுக்காக கொடுத்த முன் பணத்தை அப்படங்களின் தயாரிப்பு தரப்பு திரும்ப கேட்டுள்ளதாம். இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் வடிவேலு எந்த படத்திலும் நடிக்க முடியாது என கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.












