களவாணி 2 தலைப்புக்காக தயாரிப்பாளர் இயக்குனர் திடீர்மோதல்!
2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “களவாணி” திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த “எத்தன்” படத்தைத் தயாரித்து வெளியிட்டது.தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் “வதம்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க “களவாணி 2” என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது.
“களவாணி 2” படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது.இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இதற்கிடையே இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே தனது ‘வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் ‘களவாணி-2’படத்தை இயக்கி தயாரிப்பதாகவும்,. முதல் பாகத்தில் இணைந்து நடித்த விமல், ஓவியா ஆகியோரே இரண்டாம் பாகத்திலும் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கிறார்கள் என்றும் ‘களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும் இயக்குனர் சற்குணம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து ‘களவாணி-2’ பட தலைப்பு யாருக்கு சொந்தம் எனது குறித்து கடும் மோதல் ஏற்பட்டுள்ளது . இதையடுத்து இருவரும் கோர்ட்டு படியேறவும்முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












