ரஜினிகாந்த்ஆ ன்மிகப் பயணமாக கடந்த 10- ம் தேதி இமயமலை, ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், இன்று பிற்பகல் 2 மணியளவில்சென்னை திரும்பினார்.வீடு திரும்பியதும் போயஸ் கார்டனில் வீட்டு வாசலில் காத்திருந்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ரஜினிகாந்த் கூறியதாவது,“புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. ஆன்மிகப் பயணம் சென்று வந்தபிறகு என்மனது புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. ரத யாத்திரை என்பது மதக் கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதக் கலவரம் எந்த வடிவில் வந்தாலும், அரசு அதனைத் தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.சினிமாத்துறையில் நடக்கும் ஸ்டிரைக் பத்தி முதலில் இருந்தே நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், சினிமாவில் வேலை நிறுத்தம் என்பதை மட்டும் செய்யவே கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும். கமல்ஹாசன் என்னைப் பற்றி கூறிய கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லைஎன்றவர்,இன்னொரு கேள்விக்கு பதிலளிக்கையில், “என் பின்னால் பாஜக இல்லை. என் பின்னால் இருப்பது கடவுளும் மக்களும்தான்” மேலும், ஏப்ரல் 14 ஆம் தேதி என்னுடைய கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை ‘ இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார் .