விஜய் படத்துக்கு மட்டும் ஷூட்டிங் நடத்திக்கொள்ள அனுமதிக்கவில்லை’ என தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.மேலும், கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தம் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும்நி றுத்தப்பட்டுள்ளன. அத்துடன், வருகிற 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னையில் உள்ள விக்டோரியா ஹாலில்இன்று காலை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.‘மற்ற படங்களின் படபிடிப்பைஎல்லாம் நிறுத்திவிட்டு, விஜய் படத்துக்கு மட்டும் தயாரிப்பாளர் சங்கம் சிறப்பு அனுமதி கொடுத்தது ஏன் ?’ எ ந பல தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியும் கேள்வியும் எழுந்தது பல திரையுலக பிரமுகர்கள் தங்களது டுவிட்டர் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சங்கத்தை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர் .இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ பதிவில் கூறியுள்ளதாவது, “ஸ்டிரைக் பற்றி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட போதே, ஏற்கெனவே சில இடங்களில் ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்கியிருந்தால், ஓரிரு நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். காரணம், இதனால் தயாரிப்பாளர்களின் பணம் வீணாகும். அந்த அடிப்படையிலேயே விஜய் படத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் முறையாக அனுமதி கோரியதால், படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.விஜய் படத்துக்கு மட்டும் இந்த அனுமதி தரப்படவில்லை. மதுரையில் ‘நாடோடிகள் 2’ படத்தை இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இரண்டு நாட்களில் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என்பதால், அவருக்கும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் இன்னும் சில நிறுவனங்களும் அனுமதி பெற்றுள்ளன. எனவே, விஜய் படத்துக்கு மட்டும் தான் சிறப்பு அனுமது என்பது தவறான தகவல்” எனக் கூறியுள்ளார்.