‘சூதுகவ்வும்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜிகர்தண்டா’, ‘மாநகரம்’, ‘மரகதநாணயம்’ உட்பட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளவர் முனீஸ்காந்த் என்ற ராமதாஸ். இவருக்கும் தேன்மொழி என்பவருக்கும் இன்று காலை சென்னை வடபழனியிலுள்ள முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று மாலை வளசரவாக்கத்தில் உள்ள ‘பி-பாலஸ்’ திருமணமண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.