குரங்கு கையில் மாலை கிடைத்தால் என்னாகும்? அதைப் போல சின்னஞ்சிறு சிறுமிகளை நாலைந்து குரங்குகள் கிழித்துப் போட்டு நாசப்படுத்தி இருக்கின்றன . அதுவும் கொடியவர்களை தட்டிக் கேட்கும் கடவுள் என நம்பப் படுகிற காளி கோவிலில் வைத்து எட்டு வயது சிறுமிக்கு போதை மருந்து புகட்டி இருக்கிறார்கள்.அதற்கு பிறகு வேட்டையாடல் நடந்திருக்கிறது.
இதைப் பற்றி அகில இந்திய காங்.கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு என்ன சொல்கிறார்?
‘சினிமா முரசம் ‘ஆசிரியரிடம் பேசிய விவரம் இனி:
“மேக் இன் இந்தியா போயி ரேப் இன் இந்தியாவாக மாறிடிச்சு! இந்த மாதிரி கற்பழிப்புகள் பிஜேபி ஆள்கிற, மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ்,குஜராத்,ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களிலும் அந்த கட்சி ஆதிக்கம் செய்கிற இடங்களிலும் நடக்கிது.மதத்தை வைத்து சண்டைய உருவாக்கப் பார்க்கிறாங்க
இப்ப ஆசிபா விஷயத்தை பார்த்திங்கன்னா அந்த சிறுமியின் கம்யூனிட்டியை சேர்ந்தவங்களுக்கு பயம் வரனும்,அவங்களை தாண்டி அவர்களால் இருக்க முடியாது என்கிற எண்ணம் வரணுமாம்.அதுக்காகவே அந்த சிறுமியை அவ்வளவு கோரமாக கொலை பண்ணிருக்காங்க.
இதை கேட்டா ‘முஸ்லிமை இந்து ரேப் பண்ணலியா’ன்னு கேட்கிறாங்க.இது இந்து முஸ்லீம் பிரச்னை இல்ல. யார் வீட்டுக் குழந்தையோன்னு விட்டுற முடியாது.நாளைக்கு உங்க வீட்டுக் குழந்தைக்கு நடக்கலாம் .என் வீட்டுக் குழந்தைக்கு நடக்கலாம். எந்த குழந்தையாக இருந்தா என்ன ..இந்திய மண்ணின் குழந்தை.இந்த தாய் மண்ணில் பிறந்தது. எனக்கு கோபமும் அழுகையும்தான் வருது!”
“இதுக்கு என்ன முடிவு எடுத்தா சரியாக இருக்கும் மேடம்?”
“துபாயில் இந்த மாதிரி சம்பவம் நடந்த அடுத்த 15 வது நிமிசமே அந்த குற்றவாளியை பொதுமக்கள் கூடுகிற பொது இடத்தில் வெச்சு சுட்டுக் கொன்னுருவாங்க.அதை பார்த்த மத்தவங்களுக்கு பயம் வரும்ல !நம்ம நாட்டில் பயமே இல்ல.எது செய்தாலும் காப்பாத்திடுவாங்க .மதத்தை சொல்லி தப்பிச்சிடலாம் இந்துத்வான்னு சொல்லி எஸ்கேப் ஆகிடலாம்னு நினைக்கிறாங்க.”
“எட்டு வயசு சிறுமின்னு நினைக்கலியே ?”
“கேட்டால் , போட்டிருந்த டிரஸ் நல்லா இருந்துச்சு. அவ இடுப்பு தெரிய வந்தாள்னு காரணம் சொல்வாங்க. ஆணும் பெண்ணும் நிர்வாணமாக இருக்கும் அந்தமான் ஆதி மனிதர்களிடம் கூட இல்லாத கோரம் இந்தியாவில் நடந்து இருக்கே!”
“ஆளும் கட்சியான பிஜேபி சரியான நடவடிக்கை எடுக்கலேன்னு நினைக்கிறீங்களா?”
“அரஸ்ட் பண்ணப்போனவங்களை பிஜேபி தலைவர் தடுத்திருக்கார்.! சிறுமி கொலைக்கு காரணம் அவங்க இல்லன்னு சொல்லி மிரட்டி இருக்கார்.பார்லிமெண்ட்ல எத்தனை பிஜேபி பெண் எம்.பி.க்கள் இருக்காங்க. யாராவது ஒருத்தர் எங்களுக்கு வெட்கமாக இருக்குன்னு சொல்லி நீதி கேட்டாங்களா?”
“பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார்னு நினைச்சி இருக்கலாமே?”
“பிரதமர் மோடிக்கு ராஜீவ்காந்தி என்ன டிரஸ் போட்டார், கோவிலுக்கு சாமி கும்பிடப்போனாரா,90 வயசுப் பாட்டியை பார்க்கப்போனாரா என்பதை பத்தி பேசுவாரே தவிர மற்றதுக்கு வாயை திறக்கவே மாட்டார்” என்கிறார் குஷ்பு.