புண்ணியவாட்டி ஸ்ரீ ரெட்டி என்றைக்கு துணிகளை அவிழ்த்து வீசினாரோ அன்று ஆரம்பித்தது உண்மைகளின் ஊர்வலம்! இன்று வடக்கு வரை விரிவாகி விட்டது விவாதம்!
ஸ்ரீதேவி உள்ளிட்ட சித்திரப்பாவைகளை நடனத்தால் செதுக்கியவர் சரோஜ்கான். அவரே “இதெல்லாம் சினிமாவில் சகஜமப்பா” என வாக்குமூலம் அளிக்க மொத்த சினிமாவும்அவரை எதிர்க்க பிரச்னை சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
சரோஜ்கானுக்கு ஆதரவாக கை கொடுத்திருக்கிறார் சத்ருகன் சின்கா.இவரது மகளும் நடிகையே!
“சினிமாவில் மட்டுமல்ல ‘காஸ்டிங் கவுச்’ அரசியலிலும் இருக்கிறது.நினைவு தெரிந்த நாளில் இருந்து இருக்கிற பழக்கம்தான்.!” என்று குண்டு போட்டிருக்கிறார்.
‘நீ என்னை திருப்தி படுத்து, நான் உன்னை திருப்தி படுத்துகிறேன்.’என்பதுதான் இதில் இருக்கிறது.இதை சரியானதுதான் என்று நான் சொல்லவில்லை நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா?
ஆனால் யாருக்கு எது விருப்பமோ அது நடக்கிறது. இது தனிப்பட்ட இருவர் சம்பந்தப்பட்டது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?” என்று கேட்கிறார் சின்கா.