‘வெயில்’ படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வசந்த பாலன். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் இப்போது ஒரு ஹீரோவாகவும் வலம் வர, ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக நடிக்க வைத்து வசந்த பாலன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ஜீவாவின் ‘போக்கிரிராஜா’ படத்தை தயாரித்தவரும், ‘ஒன்பதுல குரு’ என்ற படத்தை இயக்கியவருமான பி.டி.செல்வகுமார்,ஆல்பம், வெயில்,அங்காடித் தெரு, காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலனுடன் புதிய கூட்டணி அமைக்கிறார். இயக்குனர் வசந்தபாலன் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய ஜி.வி. பிரகாஷ், இம்முறை அவரது இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் தலைப்பு,மற்ற நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.