“முன்னெல்லாம் இமயமலைக்கு நிம்மதியா போயிட்டிருந்தேன், அரசியலுக்கு வரப்போறேன்னு என்னிக்கு சொன்னேனோ அன்னிக்கி ஆரம்பிச்சது ‘மைக் ‘தொல்லை.இமயமலைக்கே மைக்குடன் வந்திர்றாங்க .இங்கதான் அவ்வளவா மைக்க நீட்டல!” என்பதாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் மனசு கட்டாயம் நினைச்சிருக்கும்.
கருப்பு ஸ்வெட் சர்ட். கருப்புக்கண்ணாடி, குறுக்கு தோள் பை என ரஜினியால் ஜாலியாக மெட்ரோ ரயிலில் பயணிக்க முடிகிறது. இந்தியாவில் முடியுமா? ஒரு பட்டாலியன் போலீசுடன் போனால்தான் சாத்தியம். அமெரிக்காவில் ( வடக்கு) ஒரு கோவிலை விடவில்லை.தரிசனம் முடிந்திருக்கிறது. நண்பர்கள் குடும்பங்களுக்கு போகிறார். பேசுகிறார் .நிம்மதியான் பயணம், மருத்துவ சோதனைகளுடன் ஒரு பக்கம் அரசியல் எனர்ஜியும் கூடி இருக்கிறது.
வாங்க..களம் காத்திருக்கு!