“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்பார்கள் .சினிமாவில் எல்லோர்க்கும் இது சாத்தியமாவதில்லை. பல காதல் மணங்கள் பாதியில் கவிழ்ந்து விட்டதைப் பார்த்திருக்கிறோம் .தெரிந்து பழகியவர்கள்,பிறர் கண் படாமல் பழகியவர்கள் .சுவரேறி வந்து கடி மணம் புரிந்து கொண்டவர்கள் என பல வகையான கல்யாணங்களைப் பார்த்திருக்கிறது தமிழ்த் திரை உலகம்.ஆனால் அவர்களிடம் பேசினால் குறுங்கதைகள் அதிகம் சொல்வார்கள்.
கேரளத்து மோகன்லாலுக்கு சென்னைப் பொண்ணு. திரைப்பட நடிகர் பாலாஜியின் மகள். ஒரு வகையில் நம்ம ரஜினிகாந்துக்கு உறவு முறை.மோகன்லாலின் மனைவி சுசித்ரா.
திருமணம் நடந்து முப்பது ஆண்டுகள். இல்லறம் நல்லறம் என வாழ்ந்து வந்தவர்கள்.
அண்மையில் மனைவியை கவுரவிக்கும் வகையில் மோகன்லாலே பாடி அந்த பாடலை மனைவிக்கு அன்புப்பரிசாக வழங்கி இருக்கிறார்.
அவரும் கிட்டாரிஸ்ட் சார்லஸ் ஆண்டனியும் பாடலை பதிவு செய்திருக்கிறார்கள்.
“சந்தனத்தில் கடைந்தெடுத்த சுந்தரி( அழகிய) சிற்பம்” என மலையாளத்தில் லாலேட்டன் பாடி இருக்கிறார்.
வந்திருந்த பெருங்கூட்டம் ஆரவாரித்திருக்கிறது.
தமிழில் ஓரளவு பாடக்கூடிய நடிகர்கள் தங்களின் மனைவிக்கு இப்படி ஒரு புகழாரம் சூட்டலாமே!