வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வீரமாதேவி’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், சன்னி லியோன் வீரமாதேவியாக நடித்து வருகிறார்.இவருடன் நாசர், நவ்தீப் ஆகியோர் முக்கிய கேரக்டர்களை ஏற்றுள்ளனர்.அம்ரிஷ் இசையமைக்க, பொன்செ.ஸ்டீபன் தயாரிக்கிறார்.இந்தப் படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள சன்னிலியோன் ,வரலாற்றுப் படம் என்பதால், இந்தப் படத்துக்காக வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றை கற்றுக்கொண்டு, அதன்பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் . தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று வெளியாகியுள்ள நிலையில்,இப்படம் குறித்து சன்னி லியோன் கூறியதாவது,
“இந்தப் படத்துக்குப் பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி.சி.வடிவுடையான் இந்தக் கதையை எனக்கு சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்கு தயாராக ஆரம்பித்து விட்டேன்” என்கிறார்.