ரமேஷ் செல்வன் இயக்கத்தில்,ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரித்திருக்கிற படம்தான் ‘நுங்கம்பாக்கம்.’
“இது எந்த மாதிரியான கதை ” என்று இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வனிடம் கேட்டோம்…
‘நுங்கம்பாக்கம் உண்மையை உள்ளடக்கிய கற்பனை கதை.நாம் எவ்வளவோ படங்களை பார்க்கிறோம் அந்தப் படங்களின் காட்சிகளில் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு இருக்கும். பாடல் காட்சிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து காட்சிகளுமே அந்தந்த இயக்குனரின் கற்பனைகள் மட்டுமல்ல.அவரவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாகவும் கேள்விப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாகவும் இருக்கும்.நுங்கம்பாக்கம் முழுக்க முழுக்க கற்பனை கதை தான். அதில் கொஞ்சம் நிஜ சம்பவங்களும் கலந்திருக்கும். நான் சினிமாவுக்கு வந்து எதையும் சம்பாதிக்க வில்லை நிறைய இழந்திருக்கிறேன். நிம்மதியையும் சேர்த்து ஜெயிக்கனும்கிற வெறி இருக்குஉழைக்கவும் செய்கிறேன் வெற்றி அருகில் தான் இருக்கிறது.
அந்த வெற்றிக்கனியை இதில் பறிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.நிறைய பிரச்சனைகளை இந்தப் படத்தில் நான் சந்தித்திருக்கிறேன் .. “என்கிறார்.படத்தைப் பார்த்த தித்தீர் பிலிம்ஸ் k.ரவிதேவன் படத்தின் மொத்த உரிமையை பெற்றிருக்கிறார் என்றார் இயக்குனர் ரமேஷ்செல்வன்.