“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கக்கூடாது பாப்பா ” என்று குழந்தைகளுக்கு உடல் நலம் பற்றி சொன்னவர் பாரதி.
இந்த நாட்டு மக்கள் அனைவரும் உடல் நலத்துடன் பலசாலியாக இருக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் மத்திய மந்திரி ராஜவர்தன் ரதோட் சொன்னது இன்று வி.வி.ஐ.பி. சரக மக்கள் மத்தியில் மட்டுமே ஒரு போட்டியை உருவாக்கி இருக்கிறது.
விராட் கோலி சவால் விடுகிறார்.பிரதமர் மோடி ஏற்கிறார்.நல்ல விஷயம்தான்!
இதோ நடிகை சமந்தாவே ‘புல் அப்’ எடுக்கிற வேகத்தைப் பாருங்கள்.
“ஐயோ முன்னெல்லாம் பயிற்சியாளர் சொல்லும்போது வயிற்று வலி,பல்லு வலி,தலை வலிக்கிது என்று சொல்லி விடுவேன்.ஆனால் இப்ப அப்படி சொல்வதில்லை .உடல் அழகு முக்கியம்” என்கிறார்.
இதெல்லாம் சாமான்யர்களுக்கு சரியாகுமா?