காசு சேர்ந்ததும் தமிழ் கசந்து போச்சுதா! வாய்ப்பு போனதால் வார்த்தை தடித்து வெடித்ததா?
எதாக இருந்தால் என்ன..டாப்சி நல்ல நடிகை. கருத்தான கதைகள் கிடைக்காததால் பறவை டோலிவுட் பக்கமாக பறந்தது. அங்கும் கவர்ச்சிக்கே முன்னுரிமை என்பதால் பாலிவுட் போய் விட்டது.
கோலிவுட்டுக்கு எத்தனையோ புதிய பறவைகள் வந்து விட்டன. ஆனாலும் டாப்சிதான் வேணும் என்று பிடிவாதமாக ஒரு தயாரிப்பாளர் சென்றிருக்கிறார் இயக்குநருடன்!
ஒரு வரி கூட கேட்கவில்லையாம்!
“சார்! மறுபடியும் பப்.பார்ட்டி, கதைகளில் டான்ஸ் ஆடி நடிக்க நான் தயாராக இல்லை. நயன்தாராவுக்கு கொடுக்கிற மாதிரி எனக்கு இம்பார்ட்டன்ஸ் இருக்கிற படம் எடுப்பிங்களா? அப்படி இல்லேன்னா சாரி சார் ! நான் வரலே!” என்று சொல்லி அனுப்பி விட்டார் என்கிறார்கள் .
டாப்சி சொன்னதில் என்ன தப்பு?