காலா படம் பற்றி பல கருத்துகள். ரஜினியின் தீவிரமான ரசிகனின் பார்வை ஒரு விதமாக இருக்கும்.நடுநிலையாளனின் கருத்து வேறு விதமாக இருக்கும்.
ரஜினியின் திரை உலகப்புகழ் அவரது அரசியலுக்குத் துணையாக இருக்கலாம். ஆனால் அரசியல் பிரவேசம் அவரது திரைத் தொழிலுக்கு பாதுகாப்பாக இருக்குமா? உச்ச நடிகராக அவரை கொண்டாடிய ஏனைய கட்சிக்காரர்களுடைய ஆதரவு தொடருமா? அவரது அரசியல் பார்வை கட்சி சார்பற்றவர்களை பாதிக்காதா?
இத்தகைய கேள்விகள் எவ்வளவோ!
ஆஸ்கார் பரிசுகளை அள்ளியவர் சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. ரஜினியின் பல படங்களில் பணியாற்றியவர் .இவர் என்ன சொல்கிறார்?
“ரஜினியின் திரை உலக வாழ்க்கைக்கு அவரது அரசியல் பிரவேசம் ‘நெகட்டிவ் போர்ஸ் ‘ஆக இருக்கலாம். என்னால் உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும் யூகமாக சொல்லலாம் அல்லவா! ( எச்சரிக்கையான மனிதர்,) கடந்த ஒரு வருடமாக அவரை வேறு விதமாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்” என்கிறார்.
காலா படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாமல் போனதாக சொல்லப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?