“ஒன் லைன் சொன்னேன் ஓகே ஆகிடுச்சு’ என சந்தோசப் படுகிற டைரக்டர்களும் இருக்கிறார்கள். ‘அஞ்சு மணி நேரம் சொல்லி ஆவி போனதுதான் பலன் ‘ என்று நொந்து புலம்பல்ஸ் விடும் இயக்குநர்களும் இருக்கிறார்கள்..
எஸ்பி.சினிமாஸ் தயாரிப்பு, அறிவழகன் டைரக்ஷன்,நயன்தாரா ஹீரோயின், ஹீரோவைப் பிடி என்கிற கட்டத்துக்குள் புகுந்த பிறகு யார் போட்ட புகையோ தெரியவில்லை கண்களை கசக்க வைத்திருக்கிறது.
படம் டிராப்டு என்கிறார்கள்.
இல்லை இல்லை டைரக்டர்தான் டிராப்டு என்கிறது தயாரிப்பு சைடு!
“அதே கதை ,அதே நயன்,அதே டைரக்டர் ,தயாரிப்பாளர்தான் வேற” என்கிறது அறிவழகன் சைடு!
எது எப்படியோ நயன் தற்போது ஹைதராபாத்தில் பிசி. தெலுங்கு ஒன்றும் விசுவாசம் ரெண்டுமாக இருக்கிறார்.
விரைவில் ஹாரர் மூவி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது,