வெங்கட் பிரபு இயக்கி வரும்புதிய படம் ‘பார்ட்டி’. இதில்,சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, ‘கயல்’ சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலர் நடித்து வரும் இப் படத்தை டி.சிவாவின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு பிரேம்ஜிஅமரன்இசையமைத்து வரும் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் தற்போது மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஜூலை 2-ஆம் தேதி இப்படக்குழு வெளியிட உள்ளதாம்.
அப்படியென்ன இப்பாடலில் விசேஷம் என கேட்பவர்களுக்கு . ‘ச்சா ச்சா சாரே…’ என்று தொடங்கும் இந்த பாடலை நடிகர்கள் சூர்யா, கார்த்தி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கான புரோமோ ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. பிரேம்ஜி இசையில் சூர்யா, கார்த்தி இணைந்து ‘பார்ட்டி’க்காக பாடியுள்ள இந்த பாடல் இவ் வருடத்தின் ஹிட்டாகலாம் என்கிறது வெங்கட்பிரபு படக்குழு!