பப்ஸை தின்று விட்டு காகிதத்தை கசக்கி பால் மாதிரி வீசி எறிவதை பழக்கமாக சிலர் வைத்திருக்கிறார்கள். சாப்பிட்ட பின் இலையை எடுப்பது கூட கவுரவக்குறைவு என பலர் நினைக்கிறார்கள். இது கூட ஆதிக்க உணர்வுதான்!
ஆனால் அத்தகைய உணர்வு இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்களில் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்வது சிறந்த வழி காட்டுதல்! தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர் எளிமையானவர். கர்வம் இல்லாதவர். ஷூட்டிங் ஸ்பாட்களில் அவர் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதை மற்ற நடிகர்களும் தொடரலாம்.
அதற்கென ஆள் இருக்கும்போது நமக்கென்ன வந்தது என நினைத்தால் ?