“கடைக்குட்டி சிங்கம்’ உண்மைச்சம்பவமா ?”
“இல்லிங்க.உண்மையான கேரக்டர்களை வைத்து உருவாக்கப்பட்ட கதை” என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
“இந்தக்கதை எம்.ஜி.ஆர்.க்காக எழுதப்பட்ட கதை மாதிரி இருக்கும் .அவ்வளவு வருசமா இந்த கதை இருக்கு ” என்று கார்த்தி குறுக்கிட இதுதான் சமயம் என்று நடிகர் சூரி குறுக்கிட்டு “சின்ன எம்.ஜி.ஆர் .கார்த்தி” என பட்டத்தை சூட்டிவிட்டார்.
பதறிப்போன கார்த்தி “ஐயா சாமி.விடுங்க. இது அவருக்கு எழுதப்பட்ட கதை மாதிரி இருக்கும்னு சொல்ல வந்தேன்”என சொல்லி தன்னை விடுவித்துக் கொண்டார்.
தற்போது இயக்குநர் பாண்டிராஜ் என்ட்ரி!
“நான் ரொம்ப வருசமா கையில வச்சிருந்த கதை .ஆக்சுவலா ஆசான் என்கிற கதையில் இருந்துதான் ‘பசங்க’ கதையை எடுத்தேன். இன்னும் ஆசானை எடுக்க முடியாமல் இருக்கு, அதுக்கு அடுத்து இந்த கதையைத்தான் எடுக்கலாம்னு இருந்தேன்,மூணு வருசமாச்சு.இந்த கடைக்குட்டி சிங்கத்தை ஞானவேல்ராஜா எடுப்பதாக இருந்தது.பிறகு அவரும் ராஜாவும் சேர்ந்து எடுப்பதாக மாறுச்சு. கதைய கேட்ட சூர்யா சார் நாம்பளே எடுப்போம்னு சொல்லி எடுத்திருக்கார்.”என்றார் பாண்டிராஜ்.
“அண்ணன் தயாரிப்பு என்பதால் கார்த்தி சார் சம்பளம் வாங்கலியா?”
“யார் சொன்னது?எனக்கும் குடும்பம் இருக்குல்ல .சம்பளம் வாங்கிட்டுத்தான் நடிச்சேன்.” என்கிறார் கார்த்தி.
மறுபடியும் பாண்டிராஜ்!
“இந்த கதையில கேரக்டர்களின் பெயர் ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும்.மங்கம்மராணி,வேலுநாச்சியார் ராணி,ஜான்சிராணி இப்படி அக்காமார்களுக்கு பேர் இருக்கும்.சத்யராஜ் சார் இதில தாத்தா,அப்பா, ரெண்டு மனைவிகளுக்கு புருஷன் இப்படியான கேரக்டர்களில் வந்திருக்கிறார்.தகுந்த வயசு வந்ததும் மகன்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விடணும் என்பதை பாடமா சொல்லிருக்கிறேன் ” என்கிறார்.