தமிழுக்கு தங்கக்கிரீடம், நாட்டுப்புறக்கலைகளுக்கு நவரத்தின மாலை என வாய்ச்சவடால் அடித்தே வீணாகிப்போனவர்களுக்கு மத்தியில் இப்படியும் சில மாணிக்கங்கள்!
சிறந்த பாடகர்கள் பாடகிகள் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து அழைத்து வந்து தனது இசையில் பாட வைத்து மகிழ்பவர் டி.இமான்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற செந்தில் கணேஷ் என்பவருக்கு மிகப்பெரிய வாய்ப்பினை அளித்திருக்கிறார் .
பொன்ராம் இயக்கம். சிவகார்த்திகேயனின் சீமராஜா படம். வாழும் தமிழின் வரிகளை வழங்கும் யுகபாரதி .
பட்டுக்கம்பளம் விரித்திருக்கிறார்கள்.
இமானை அடுத்து வாய்ப்பு இன்டர்நேஷனல் ஏஆர்ரகுமான்.இவர் முன்னரே வாக்களித்திருந்தார்.சூப்பர் சிங்கரில் யார் வெற்றி பெற்றாலும் வய்ப்பளிப்பேன் என்பதாக!