என்னதான் பெரிய நடிகரா இருந்தாலும் அது ரஜினிகாந்தாகவே இருந்தாலும் காதலனுக்குத்தான் காதலி மார்க் போடுவாள். இது உலக நியதி. அதுக்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா? கோலமாவு கோகிலா படத்துக்காக நயன்தாராவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் கொஞ்சம் வித்தியாசம்.
“உலகம் உங்களைப் பாக்கிற விதம் டெய்லி மாறிட்டே இருக்கும்.!மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நினைத்துக் கொண்டிருந்தா நாம் ஒரு வாழ்க்கை வாழ முடியாது.”
இந்தப் பதில் யாரை நினைத்து சொல்லி இருப்பார் என்பதை விளங்கிக் கொள்ள கோனார் நோட்ஸ் தேவை இல்லை. அடுத்து சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இருவருக்கு நயன் போட்டிருக்கும் மார்க்?
சிவகார்த்திகேயன் 9. விக்னேஷ்சிவன் 9.9 !
என்ன இருந்தாலும் காதலன் உயர்வுதானே!