“சொந்தக்கதையை சொல்ல முடியல !உனக்கேன் பக்கத்து வீட்டுக் கவலை ?”என்று பாட்டி கேக்கிற மாதிரி ஆகிப் போச்சு ஆண்ட்ரியாவின் கதை .ஸ்ரீ ரெட்டியின் புலம்பல் சத்தம் அனேகமாக அடங்கி விட்டது என்றே சொல்லலாம். லாரன்ஸ் பதில் சொன்ன பிறகு அமைதியாகிவிட்டார்.சென்னை போலீசில் செய்த புகாருக்கும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. வேஸ்ட் பாக்ஸில் போட்டு விட்டார்களோ என்னவோ!
ஆனால் ஆண்டிரியா தற்போது ஸ்ரீ ரெட்டிக்கு சப்போர்ட்டர் ஆகி இருக்கிறார்.
” ஸ்ரீ ரெட்டி சொன்னது உண்மைன்னா அதுக்கு தில்லான மனசு வேண்டும். நான் இதுவரையும் அவர் சொன்னதைப்போல எதையும் சந்திச்சதில்லை.அந்தப் பொண்ணு வெளிப்படையாவே சொல்லிருக்கு..அது உண்மைன்னா தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்!” என்கிறார்