கான்ட்ரவர்ஸி படம் என்றால்தானே பார்க்க வருகிறவர்களுக்கு ஆர்வம் பிச்சுக்கிட்டுப் போகும். என்ன தான் காட்டுறாங்கன்னு பார்ப்பதற்கு எல்லா கட்சியினருக்குமே ஆசை இருக்கும் .அந்த வகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தெலுங்கு படஉலக பிரமுகர் பிருந்தா பிரசாத் படமாக்குகிறார்.
தமிழ் தெலுங்கு, இந்தி என மும்மொழிப் படம். நமது இயக்குநர் ஏஎல். விஜய்தான் இயக்கம்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று பூஜை, இன்னும் நடிக நடிகையர் தேர்வு முடியவில்லை. ஜெ.யின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே படமாக்குவார்கள்.
அவரது பெர்சனல் வாழ்க்கையைப் பற்றி ,அல்லது லஞ்சம்.ஊழல் பற்றிய வழக்கு,சிறைத்தண்டனை பற்றியோ காட்ட மாட்டார்கள் என உறுதியாக நம்பலாம்.
இந்த கதையை படமாக்குவதற்கு என்னிடம் அனுமதி வாங்கவில்லை என்று யாராவது கோர்ட்டுப்படி ஏறாமல் இருந்தால் சரி.வம்பு செய்வதே வேலை என சிலர் இருக்கிறார்களே! .