தமிழ்ச்சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ராதிகா சரத்குமார். ஒரு நேரத்தில் தமிழ் இவரிடம் கெஞ்சியது ‘அய்யோ விட்ரு!’ என்று.! பின்னர் தமிழ் இவரிடம் கொஞ்சியது “விட்ராதே ராதே!”என.!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கண்டு பிடிப்பு. 1978 ம் ஆண்டு கிழக்கே போகும் ரயிலில் படத்தில் அறிமுகம் ஆனார். படிப்படியாக உயர்ந்து இன்று தயாரிப்பாளராகவும் இருக்கிறார். சின்னத்திரையில் தொடர்ந்து நடித்தாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தவில்லை.இவருக்கு வயது 55.
இவரது சேவையைப் பாராட்டி கணவர் புரட்சித் திலகம் சரத்குமார் பெரிய விழா நடத்தவிருக்கிறார்.அக்டோபர் 27 ல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகப்பெரிய அளவில் கலை விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டைமண்ட் பாபுவின் தலைமையிலான ‘வி ஃபோர் ‘ அமைப்பினர் செய்து வருகிறார்கள்.