
“மலை உச்சியிலே நிக்க பயமா இருக்கு !” என்பதைச்சொல்ல பயந்த ஒரு நடிகை சொல்லாமல் கொள்ளாமல் டில்லிக்கே ஓடிப்போனார். ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்பது படத்தின் பெயர். கேசவன் இயக்கம்.கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய காதல் பாடலை கொடைக்கானல் மழை முகட்டில் ஷங்கர் மாஸ்டர் படமாக்கிக் கொண்டிருந்தார். அறிமுக நடிகை அனுபமா பிரகாஷ் அறைக்குச்செல்வதாக சொல்லிவிட்டு காரில் கிளம்பிப் போனார் ,போனவர் போனவர்தான் .திரும்பியே வரவில்லை. பதட்டத்தில் படக்குழு. வழி தெரியாமல் திண்டாடுகிறதோ,என்கிற கவலை. கொடைக்கானலிலேயே அந்த ஹீரோயின் இல்லை. “அவ்வளவு உயரத்தில் நிக்கச்சொன்னால் எப்படி பயப்படாமல் நிக்க முடியும்.?பயமா இருந்தது ,அதான் மதுரைக்குப் போய் அங்கிருந்து டில்லிக்குப் போயிட்டேன்”என்று போனில் தகவல்.
உடனே தயாரிப்பாளர் டெல்லிக்கு சென்று சமாதானம் செய்து மீண்டும் படப்பிடிப்பிற்கு அழைத்து வந்திருக்கிறார்.. திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம்7தேதி வெளியாகிறது..நல்ல வேலை நாயகனையும் கூட்டிக்கொண்டு ஓடவில்லை.
11 Attachments












