ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “.இதில்,சுந்தர். சியுடன் தன்ஷிகா , சாக்சி பர்வீந்தர் , VTV கணேஷ் , யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். முகவரி , நேபாளி , தொட்டி ஜெயா , 6 மெழுகுவர்த்திகள் போன்ற கல்ட் படங்களை இயக்கிய VZ துரை இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை பற்றி இயக்குனர்VZ துரை கூறியதாவது , இது புதுமையான ஹாரர் படம். ஆனால்,பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் மிகவும் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன் என்கிறார். படத்தின் 85 % படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் ஊட்டியில் வைத்து நடைபெற்றது. இன்னும் படத்தின் சில காட்சிகள் ஹைராபாத் மற்றும் சூரத்தில் நடைபெறவுள்ளது.கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.ஒளிப்பதிவு E. கிருஷ்ணசாமி ,