மீ டூ என பாலியல் வன்முறையை வைரமுத்து மீது சுமத்தி ஒருவித பரபரப்பு பந்தி வைத்து விமர்சனங்களை அள்ளி வீசியவர் பின்னணிப் பாடகி சின்மயி. இவருக்குப் பிறகுதான் பலர் பலவித குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.
ஆனால் எந்த விதமான ரீ ஆக்சனும் பெரிய அளவில் வரவில்லை.
மாறாக நாள் ஆக ஆக சின்மயி மீதான நம்பிக்கை குறைய இப்ப திடீர் திருப்பம்.
தென்னிந்திய திரைப்பட டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி மீது நடவடிக்கை எடுத்து நீக்கி வைத்திருக்கிறார்கள்.
என்ன சொல்கிறார் சின்மயி?
” 13 வருசத்துக்கு முந்தியே சொல்லியிருக்க வேண்டியதுதானே என்று கேட்டவர்களுக்கு எனது விளக்கம் இதுதான்.! இப்பவே இந்த நிலை என்றால் அப்போது என்னவாகி இருக்கும்?” என்கிறார்.
13 வருசத்துக்கு முந்தி ஆதாரம் கொடுத்து இருக்க முடியுமே?