காதல் என்பது ஒரு முறைதான் பூக்கும் என்பதல்ல.!
கண்ணன்,அர்ஜுனன், முருகன் போன்ற புராணத்து கடவுள்களுக்குபல தடவை பூத்து சாட்சியாக இருக்கிறபோது சாதாரண மனிதர்களுக்கு பூப்பது என்ன அதிசயமா?
எஸ்.டி.ஆர்.,ஹன்சிகா காதல் பாதியிலேயே புட்டுக்கிட்டது பாரறிந்த ரகசியம்.
அதற்கு பின்னர் ஹன்சிகாவுக்கு காதல் ஆந்திர தேசத்தில் மலர்ந்திருக்கிறது.
இரண்டே படங்களில் ராமுடன் நடித்திருந்த ஹன்சிகா சமீபத்தில் ஒரு பார்ட்டியில் மறுபடியும் அவரை சந்தித்தாராம். அன்றிலிருந்து இருவரும் டேட்டிங் கில் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த முறையாவது மணவறை வரை போனால் மகிழ்ச்சிதான்.!