siva
இயற்கை வேளாண்மை அழிந்து வரும்நிலையில் நம்பிக்கை ஊட்டியவர் நம்மாழ்வார். அவருக்குப் பிறகு அந்தப் பணியை செய்தவர் நெல் ஜெயராமன்.
விவசாயிகள் மறந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகளுக்கு கொடுத்தவர். 169 ரகங்கள் இவரால் மீட்டெடுக்கப்பட்டது.
சிறுநீரக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவரை அப்பல்லோவில் அனுமதித்து முன் பணத்தைக்கட்டி சிகிச்சைக்கான முழுச்செலவையும் ஏற்றுக் கொண்டவர் சிவகார்த்திகேயன். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஐந்து மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. நெல் ஜெயராமனின் சொந்த ஊரான கரட்டு மேட்டில் இறுதிச்சடங்குகள் நடக்கின்றன. உடலை ஊருக்கு கொண்டு செல்லவும் இறுதிச்சடங்குகளுக்காக ஆகும் அத்தனை செலவையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டிருக்கிறார். மனித நேயர்.












