சிரிப்பு நடிகர்களில் வித்தியாசமான ஆள் பவர் ஸ்டார் சீனிவாசன். தன்னுடைய படத்தை நூறு நாள் ஓட்டுவதற்காக குவார்ட்டரும் பிரியாணியும் வாங்கிக் கொடுத்ததாக சொன்னவர்தான் இந்த சீனிவாசன் .
கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பெரிய ஆளானவர். அதே போல சில மோசடி வழக்குகளிலும் மாட்டி திகார் வரை சென்று வந்த தமிழ் திரை உலகப் புள்ளிகளில் முதல் ஆள் இவர்தான்.
பத்துக் கோடி கொடுத்தால் நூறு கோடி கடன் வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றிய வழக்கில் சிக்கி இருப்பவர். பலரிடம் கடன் வாங்கி திருப்பித்தராமல் இழுத்தடிப்பதாகவும் புகார் உண்டு.
இவரை காணவில்லை என்று இவரது மனைவி ஜூலி அண்ணா நகர் போலீசில் புகார் செய்திருக்கிறார். யாராவது அவரை கடத்தி சென்றிருக்கலாம் என்கிற சந்தேகமும் இருக்கிறது.