ஜெமினி படத்தில் ‘ஓபோடு ..ஓ போடு’என்று குத்தாட்டம் போட்ட நடிகை ராணி .சொந்த மாநிலம் ஆந்திரா.பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.
நந்தினி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தபோது நெற்குன்றத்தில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் சண்முகராஜன் தன்னை அடித்ததாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ராணி போலீசில் புகார் கொடுத்தார்
.அந்த புகாரை பின்னர் அவரே வாபஸ் வாங்கி விட்டார்.
நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் செய்திருந்தார்.ராணி தன் மீது பொய்யான புகார் கொடுத்திருப்பதால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டு என்பதாக கூறி இருந்தார்.
விளக்கம் கேட்டு ராணிக்கு சங்கம் கடிதம் அனுப்பியது.ஆனால் பதிலே இல்லை.! இதனால் தொலைக்காட்சிதொடர்கள்திரைப்படங்களில்நடிப்பதற்குசங்கம் தடை விதித்திருக்கிறது .பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கிறது. கேட்பாரா ஓ போடு ராணி?