தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் மீது அடுக்கடுக்கான பல புகார்களை எதிர் அணியினர் தெரிவித்து வந்த நிலையில்,நேற்று முன்தினம் டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு ,தயாரிப்பாளர் சங்கத்திற்குஇழுத்து பூட்டினர்.மேலும் விஷால் மீது சங்கப்பணம் மோசடி ,இளையராஜா இசைநிகழ்ச்சி விவகாரத்தில் விஷால் தன்னிச்சையாக செயல் படுவதாகவும், பொதுக்குழு கூட்ட மறுப்பதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முதல்வர் முன்பு கோரிக்கையாக வைத்தனர்.இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் விஷால், தனது ஆதரவாளர்களுடன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குச் செனறு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு எதிர் தரப்பினர் போட்டிருந்த பூட்டை விஷால் உடைக்க முயன்றார்.இதில் போலிசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைது செய்யப்பட்டார்.போலீசார் பின்பு மாலையில் விடுவித்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தி. நகரில் செயல்பட்டு வரும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இந்நிலையில் விஷால் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தை இன்று அணுகினர்.அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிடப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, முறையாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தடுத்தது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், உடனடியாக சீலை அகற்ற வேண்டும் என்றும் அலுவலக ஆவணங்களை சங்கங்களின் துணை பதிவாளர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் அனைத்து உறுப்பினர்களும் சங்கத்திற்குள் நுழைய அனுமதி உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, வழக்கை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.இது குறித்து விஷால் கூறியதாவது,தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்து நற்பணிகளில் ஈடுபடும். மற்றொரு அலுவலகமும் நாளை திறக்கப்படும்.இளையராஜா இசைநிகழ்ச்சியை கண்டிப்பாக நடத்துவோம் . தொடர்ந்து எங்களது பணிகளை செய்வோம். அனைவருக்கும் கருத்துரிமை வேண்டும் அரசியலில் யார் வேண்டுமானாலும் வந்து நல்லது செய்யலாம். அரசியல் என்பது ஒரு தனிப்பட்ட நபர்களுக்காக ஒதுக்கப்பட்டது அல்ல; யார் வேண்டுமானாலும் வரலாம். தயாரிப்பாளர் பிரச்னையில் நல்ல முடிவு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்துக்கு நன்றி. நாளை காலை 9:30 மணிக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சீல் அதிகாரிகளால் அகற்றப்படும்.எந்த குற்றச்சாட்டு என்றாலும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்து உறுப்பினர்கள் வைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.