காதல் கசந்ததடி ,காலி பண்ணு இடத்தை,காத்து வரட்டும் என்கிற கதையாகி விட்டது ராணா-திரிஷா காதல்.!
இருவரது காதலை மாய்ந்து மாய்ந்து பத்திரிகைகள் எழுதியபோது ராணா கடுமையாக மறுத்தார். திரிஷாவுடன் பத்திரிகையாளர்களை பேச விடாமல் அம்மா உமாவே பேசினார்.
ஆனால் ராணாவே தற்போது தங்களுக்கிடையே இருந்த காதலை பகிரங்கமாக ஒத்துக் கொண்டு விட்டார். காரணங்களை சொல்லாமல் காதல் கை கூடவில்லை என்பதை மட்டுமே சொல்கிறார். உண்மையில் ராணாவின் காதலுக்கு தடையாக இருந்தது அவரது குடும்பத்தினர்தான்.
பெரிய குடும்பம்.ஆந்திர திரை உலகில் அவரது உறவினர்கள்தான் கொடி கட்டி பறக்கிறார்கள். ராணாவின் நெருங்கிய உறவினரான அக்கினேனி குடும்பத்தினர் சமந்தாவை தங்களது மருமகளாக ஏற்றிருப்பதால் ராணாவின் காதல் தற்போது கை கூட வழி இருக்கிறது என்கிறார்கள். “ராணா-திரிஷா நல்ல ஜோடி “என்பதாக பாகுபலி பிரபாஷ் சொல்லியிருப்பதால் வாய்ப்பு இருப்பதாகவே ஆந்திராவில் சொல்கிறார்கள்.
இருவருமே இன்னும் எத்தனை காலம்தான் காதலை மனதுக்குள் வைத்துக் கொண்டு கனவு உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.