தெறிக்க தெறிக்க சிம்பு அரசியல் வசனம் பேசப்போகிறராம் ‘மாநாடு ‘ படத்தில்!
தற்போது நடந்து வரும் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படப்பிடிப்பில் சிம்புவின் போர்ஷனை இயக்குநர் சுந்தர்.சி.முடித்து விட்டதால் அடுத்த படமான ‘மாநாடு’ வேளைகளில் சிம்பு இறங்கி இருக்கிறார்.
உடல் எடையை சற்று குறைக்க வேண்டியதிருக்கிறது. அந்த படத்தில் இவர் மார்ஷியல் ஆர்ட் எக்ஸ்பெர்ட் .இதனால் அதன் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்காக பாங்காக் பறக்க இருக்கிறார்.
இந்த படத்தின் இன்னொரு சிறப்பு அந்தல சிந்தலயாகிக்கிடக்கும் அரசியலை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேயப்போகிறாராம் இயக்குநர் வெங்கட் பிரபு. நமட்டு சிரிப்பு சிரிக்கிறார் !