கர்நாடகாவில் தேர்தல் நடந்தபோது பாஜக.வுக்கு பூச்சாண்டி காட்டியவர் பிரகாஷ்ராஜ். மேடை தோறும் மோடியை உரித்து தொங்கவிட்டு கணிசமான வசவுகளை வரவு வைத்துக் கொண்டவர்.
விட்டால் நேருக்கு நேர் விவாதம் நடத்த மோடிக்கு முன்னால் போய் நின்றுவிடுவார் போலிருந்தது .அவ்வளவு வேகம் காட்டினார்.
சோசியல் மீடியாவில் இவருக்கென தனி மரியாதை இருக்கிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். எந்த தொகுதி என்பதை பின்னர் அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
களம் இறங்கி இருக்கும் மூன்று நடிகர்களில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் பிரகாஷ்ராஜும் தங்களை முடிவைத் தெரிவித்து விட்டனர். ஆனால் இன்னும் கட்சியை அறிவிக்காத ஒரே ஆள் ரஜினிகாந்த் மட்டுமே!