அரசியல்வாதி மாதிரி ஆகி விட்டார் பிக்பாஸ் ஓவியா. “வெளியில் இருந்து ஆதரவு தருவோம்” என உட்டாலக்கிடி அரசியல் பண்ணுவது மாதிரி “எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை கிடையாது ,அது வேண்டாம்னு நினைக்கிறேன்” என்கிறார் . அதே சமயம் “ஆரவ்வும் நானும் சமாதானம் ஆகி விட்டோம்,சண்டை கிண்டை எல்லாம் கிடையாது .எங்களுக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்கிற செய்தியெல்லாம் தப்பு “என்றும்சொல்கிறார்.”ஆரவ் என் நண்பர்.சப்போர்ட்டா இருக்கார்.”என்கிற ஓவியாவை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.